Breaking News

ஜெயலலிதா அவர்களுக்குப் பாராட்டுதல்களைத் தெரிவித்து வடக்கு முதல்வர் ஆற்றிய உரை



அவைத் தலைவர் அவர்களே கௌரவ அமைச்சர்களே கௌரவ எதிர்கட்சித் தலைவர் அவர்களேகௌரவமாகாணசபை உறுப்பினர்களே!

ஒரு முக்கியமான விடயம் பற்றி சபை அமர்வின் தொடக்கத்தில்கூறவிரும்புகின்றேன். அண்மையில் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்கள் தமிழகத்தில் முதலமைச்சராக 6வது முறையாகபதவியேற்றுள்ளார்.

இதுஎமக்குமட்டற்றமகிழ்ச்சியைத்தருகின்றது.அதைஒட்டிஎமதுமனமார்ந்தபாராட்டுதல்களைஎம்யாவர்சார்பிலும்முதற்கண்தெரிவித்துக்கொள்கினறேன். தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கும் பெருமைக்கும் அவர் இதுவரைகாலமும் ஆற்றிய சேவை அங்குள்ளமக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களால் அங்கீகரிக்கப்பட்டமையே அவரின் இந்த வெற்றி.

எமதுநாட்டின்தமிழ்மக்களும்அம்மையாரின்இந்தவெற்றியால்மனமகிழ்ச்சியும்நம்பிக்கையும் தைரியமும் அடைந்துள்ளார்கள்.எமது மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும்அவர்களின் பாதுகாப்பிற்காகவும் யுத்தம் நடைபெற்ற காலங்களிலும் யுத்தம் முடிவடைந்த பின்னரும்கொள்கை பிறழாமல் துணிச்சலாகக் குரல் கொடுத்து வந்தவர் செல்வி ஜெயலலிதா அவர்கள்.

அஞ்சாமை,ஈகை,அறிவு, ஊக்கம் இந் நான்கும் எஞ்சாமை வேந்தர்க்கு இயல்பு என்ற வள்ளுவன் கூற்றுக்கமைய இந்நான்கு பண்புகளும் செல்வி ஜெயலலிதாஅவர்களின்ஆட்சியில்குறைவுபடாமல்இருந்துவருவதைநாம்அவதானித்திருக்கின்றோம்.

இந்நாட்டின்தமிழ்ப்பேசும்மக்களைப்பொறுத்தவரையில்தற்போதுவெற்றியீட்டியிருக்கும்தமிழக முதலமைச்சர் அவர்கள் எமது அரசியல் சமூக பொருளாதார அபிலாஷகளை நாங்கள்வென்றெடுக்க உறுதியான துணையாக இருப்பார் என்பது எமது எதிர்பார்ப்பு.

போரில்கணவன்மாரைஇழந்த89000இற்கும்அதிகமானஎமதுவிதவைப்பெண்களினதும் காணாமல்ப் போன பல்லாயிரக்கணக்கானவர்களின் உறவினர்களதும்போரினால் உடல் ஊறினையும் மன உளைச்சலையும் எதிர்கொண்ட எம்பாதிக்கப்பட்டமக்களதும் தம்சொந்த இடங்களுக்குத் திரும்பமுடியாமல்தத்தளித்துக்கொண்டிருக்கும்உள்நாட்டுப் புலம் பெயர் மக்களினதும் பல்லாயிரக்கணக்கான பாதிக்கப்பட்டசிறார்களினதும் மற்றையோர்களினதும் துயர்களைத் துடைத்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றக்கூடிய மனிதாபிமான தேவைகளை நிறைவேற்ற வேண்டிய அவசியம் எமக்குண்டு.

பல காரணங்களினால்எமது மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலையே இங்கு இதுகாறும்இருந்து வந்துள்ளது. இந்நிலை மாற வேண்டும். செல்வி ஜெயலலிதா அவர்கள் போன்றமனிதாபிமானமுள்ள தலைவர்கள் எமது மக்களின் விமோசனத்திற்காகப் பாடுபடும் எமக்கு உறுதுணையாகஇருப்பர் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

சரித்திர ரீதியாகப் பார்த்தால் 1983ம் ஆண்டின் கலவரத்தின் பின் இலட்சத்திற்கும் மேலானபுலம் பெயர் தமிழர்கள் தமிழ் நாட்டில் சரணடைந்தனர். அன்று தொடக்கம் இன்று வரையில் மனங்கோணாமல் எம் மக்களை அங்கு வைத்துப் பார்த்துப் பராமரித்து வருவது சாதாரண ஒரு விடயமன்று. தம்மக்களைப் பார்க்க வேண்டிய கடப்பாடுடையவர்கள் எம் மக்களையும் 33 வருடகாலமாகப் பார்த்துப்பராமரித்து வருவது எமது மனப்பூர்வமான நன்றியறிதல்களுக்குரியது.

1987ம் ஆண்டில் இலங்கை – இந்திய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட போது இலங்கைத் தமிழ் மக்கள்சார்பில் இந்திய அரசாங்கமே முகவராக நின்று அதை முன்னேற்றியது.

இந்தியஅரசாங்கத்தினாலும்தமிழ்மக்களாலும்எதிர்பார்க்கப்பட்டவை 13வது திருத்தச்சட்டத்தின்கீழ்தராதுவிடப்பட்டதைவிடத்தரப்பட்டஉரித்துக்களும்எமதுஒற்றையாட்சியாளர்களால் பின்னர்பறித்தெடுக்கப்பட்டன. போருக்குப் பின்னர் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. இலட்சத்திற்கும்அதிகமான இராணுவத்தினர் இன்றும் எம்மிடையே வடகிழக்கு மாகாணங்களில் முகாம் இட்டுள்ளார்கள்.

எம் காணிகளில் பயிரிடுகின்றார்கள். வருமானத்தைத் தாம் எடுக்கின்றார்கள். எம்மக்களின்தொழில்களுள் உள்ளீடு செய்கின்றார்கள். இத்யாதி பல இடர்களுக்கு எம்மக்கள் முகங் கொடுத்துவருகின்றனர்.

சிதைந்த 13வது திருத்தச் சட்டத்தில் இருந்து சிறந்த சமஷ;டி முறையொன்றிற்கு இந்நாடு மாற வேண்டியஅவசியம் உண்டு. அதற்கு இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் பங்கும் மிக முக்கியமானது. புலம்பெயர் எம் மக்கள் இன்னமும் இந்திய மண்ணில் அவர்கள் பராமரிப்பில் இருக்கின்றார்கள்.

அவர்களின் திரும்பல் முக்கியமானது என்பதை விட இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் உடன்படிக்கையில்கையெழுத்திட்ட இந்திய அரசாங்கத்திற்கு எமது தற்போதைய நிலைமையும் எமது வருங்காலமும்தார்மீகப் பொறுப்புக்களாக அமைந்துள்ளன என்பதை இந்திய அரசாங்கத்திற்கு எடுத்துக் கூறக்கூடியஒரே தலைவர் செல்வி ஜெயலலிதா அவர்கள் மட்டுமே. அவர் அதைச் செய்து சுமூகமான ஒரு தீர்வை நாம்பெற உந்து சக்தியாக இருப்பார் என்பது எமது கணிப்பும் எதிர்பார்ப்பும்.

இதன் பொருட்டு வடமாகாணசபையானது செல்வி ஜெயலலிதா அவர்களின் வெற்றியை வரவேற்றுப்பாராட்டும் அதே நேரம் அவரின் அரசாங்கத்துடன் கிட்டிய தொடர்பாடல்களை வைத்துக் கொள்வதற்கும்விரும்புகின்றது. கலைகலாச்சாரம் மேலும் அரசியலால் எம் இரு நாடுகளின் தமிழ்ப் பேசும்மக்களின் நெருக்கமான ஒத்துழைப்பை நாம் யாவரும் வேண்டி நிற்கின்றோம்.

மேற்படி எமது பாராட்டுதல்களை எமது அவைத் தலைவர் அவர்கள் செல்வி ஜெயலலிதா அவர்களுக்குஉத்தியோக பூர்வமாக உரிய முறையில் சேர்ப்பிப்பார் என நம்புகின்றேன்.

நன்றி

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்