Breaking News

நேரடியாக களம் இறங்கியது சனல்-4-முதலமைச்சர்,ரணில் இடம் நேர்காணல் (காணொளி இணைப்பு)

இலங்கையின் கொலைகளங்களிற்கு நாங்கள் திரும்பிச் சென்ற அதே காலப்பகுதியில் இரு முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன.

முதலாவது இலங்கையின் யுத்த குற்ற விசாரணைகளில் சர்வதேச பங்களிப்பு எதுவும் காணப்படாது என ஜனாதிபதி அறிவித்தது. யுத்தத்திற்கு பின்னர் இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பப்பட்ட பல வீடியோக்கள் மூலம் யுத்தகுற்றங்கள் இடம்பெற்றது உறுதிசெய்யப்பட்டிருந்தது.

இரண்டாவது காணமற்போனவர்கள் என தெரிவிக்கப்படுபவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என அப்பட்டமாக தெரிவிப்பதற்காக பிரதமர் ரணில்விக்கிரமசிங்க இந்து பண்டிகையொன்றை தெரிவுசெய்தது.

இரண்டு அறிக்கைகளும் தமிழ் சமூகத்திற்கு அதிர்ச்சியை அளித்துள்ளதுடன் பழைய காயங்களை மீண்டும் கிளறியுள்ளன.

இந்தநிலையிலேயே சனல்-4 தொலைக்காட்சி இலங்கை சென்று மீண்டும் தற்போது இலங்கை நிலைவரம் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை மற்றும் வடமாகாண முதலமைச்சர்,பிரதமர் ரணில் விக்கிரம சிங்க ஆகியோரிடம் நேர்காணல்களை கண்டிருக்கின்றது.

இதன்போது கருத்து தெரிவித்த முதல்வர் இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போருக்கு அரசாங்கம் சொல்வதுபோல மன்னிப்பு தீர்வாகப்போவதில்லை என்றும் உள்ளக பொறிமுறைமூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை என்றும் அழுத்தமாக தெரிவித்திருக்கின்றார்.

அத்தோடு ரணிலிடமும் ஒரு நேர்காணல் இடம்பெற்றுள்ளது. வடக்கில் பொங்கல் நிகழ்வில் பேசிய பிரதமர் காணாமல் போனோர் எவரும் இல்லை எனத் தெரிவித்திருந்தார் அந்த கேள்விக்கு பதிலளித்த ரணில் 292 கைதிகள் தவிர எவரும் உயிரோடு இல்லை என்பதை சனல்-4 இடம் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கின்றார்.

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் கூட்டணி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டதும், அது முதலில் ராஜபக்சாக்களை அதிகாரத்திலிருந்து அகற்றியது,

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதியில் ஜனாதிபதியாக பதவிவகித்தவர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக பதவிவகிக்கின்றார்.

இரண்டாவதாக ஆட்சி மாற்றம் தமிழர்கள் வாழும் வடக்கில் கண்களிற்கு தென்படும் விதத்தில் சூழலை இலகுபடுத்தியுள்ளது. கடைகளில் உற்பத்திகளை தாரளமாக காணமுடிகின்றது,மக்கள் ஓருவித இலகுவான சூழலில் வாழ்கின்றனர்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஏழு வருடங்களிற்கு பின்னரும் பல மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்த குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக நம்பகதன்மை மிக்க விசாரணைகளை நடத்த தவறியமை குறித்து மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

இதற்கு அப்பால் காணமற்போனவர்கள் குறித்து தொடர்ந்தும் எந்த வித செயற்பாடுகளும் இல்லாதது குறித்தும் அவர்கள் சீற்றடைந்துள்ளனர்.இது தொடர்ந்தும் பரந்துபட்ட துயரத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி வருகின்றது.இந்த வாரம் நாங்கள் பல கண்ணீர்களை சந்தித்தோம்.

வடக்கில் எங்கு பார்த்தாலும் இராணுவம் காணப்படுகின்றது,அவர்கள் ஆயிரக்கணக்கான நிலங்களை கைப்பற்றியுள்ளனர், அவர்கள் கடைகளையும் ஆக்கிரமித்துள்ளனர்,பல வர்த்தகங்களை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையின் இரண்டாவது முக்கிய மீன்பிடிதுறைமுகமான மயிலிட்டி இராணுவத்தின் பிடியிலேயே காணப்படுகின்றது. இதனை விட மோசமானது அந்த கிராமத்தில் யுத்தத்திற்கு பின்னரும் எஞ்சியிருந்த 40 வீடுகள் புல்டோசர் மூலம் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன,

அந்த கிராமத்தின் மக்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுபடமுடியாமல் யாழ்ப்பாணத்தில் முகாம்களிற்குள் முடங்கியுள்ளனர்.அந்த முகாம் வெறுப்பால் நிறைந்துள்ளது,ஓவ்வொரு மலசலகூடத்தையும் 15ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்துகின்றன.

யாழ்ப்பாணத்தில் மாத்திரம், டேவிட்கமரூன் இரு வருடங்களிற்கு முன்னர் விஜயம்மேற்கொண்ட முகாமில் 1700 பேர் வாழ்கின்றனர்.அவர் அவ்வேளை முன்வைத்த கோரிக்கைகள் எவையும் நிறைவேறவில்லை,யுத்த குற்றவிசாரணைகளில் சர்வதேச பங்களிப்பு அவசியம் என்பது உட்பட.

இலங்கையின் கொலைக்களங்களில் நாங்கள் பார்த்த விடயங்கள் சொல்லமுடியாதவேதனையை அளிப்பவையாக காணப்படுகின்றன,இங்கேயே விடுதலைப்புலிகள் சிலரை பணயக்கைதிகளாக பயன்படுத்தினர்,அதனை விட பெருமளவானவர்கள் படையினரால் படுகொலைசெய்யப்பட்டிருந்தனர்,

பாதுகாப்பு வலயம் என தெரிவித்த பின்னர். அந்த பகுதியில் ஷெல் வீச்சினால் உருவான பாரிய குழிகளைஅகற்ற எந்த இலங்கையின் கொலைகளங்களிற்கு நாங்கள் திரும்பிச் சென்ற அதே காலப்பகுதியில் இரு முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன.

முதலாவது இலங்கையின் யுத்த குற்ற விசாரணைகளில் சர்வதேச பங்களிப்பு எதுவும் காணப்படாது என ஜனாதிபதி அறிவித்தது. யுத்தத்திற்கு பின்னர் இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பப்பட்ட பல வீடியோக்கள் மூலம் யுத்தகுற்றங்கள் இடம்பெற்றது உறுதிசெய்யப்பட்டிருந்தது.

இரண்டாவது காணமற்போனவர்கள் என தெரிவிக்கப்படுபவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என அப்பட்டமாக தெரிவிப்பதற்காக பிரதமர் ரணில்விக்கிரமசிங்க இந்து பண்டிகையொன்றை தெரிவுசெய்தது.

இரண்டு அறிக்கைகளும் தமிழ் சமூகத்திற்கு அதிர்ச்சியை அளித்துள்ளதுடன் பழைய காயங்களை மீண்டும் கிளறியுள்ளன.

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் கூட்டணி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டதும், அது முதலில் ராஜபக்சாக்களை அதிகாரத்திலிருந்து அகற்றியது,

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதியில் ஜனாதிபதியாக பதவிவகித்தவர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக பதவிவகிக்கின்றார்.

இரண்டாவதாக ஆட்சி மாற்றம் தமிழர்கள் வாழும் வடக்கில் கண்களிற்கு தென்படும் விதத்தில் சூழலை இலகுபடுத்தியுள்ளது. கடைகளில் உற்பத்திகளை தாரளமாக காணமுடிகின்றது,மக்கள் ஓருவித இலகுவான சூழலில் வாழ்கின்றனர்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஏழு வருடங்களிற்கு பின்னரும் பல மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்த குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக நம்பகதன்மை மிக்க விசாரணைகளை நடத்த தவறியமை குறித்து மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

இதற்கு அப்பால் காணமற்போனவர்கள் குறித்து தொடர்ந்தும் எந்த வித செயற்பாடுகளும் இல்லாதது குறித்தும் அவர்கள் சீற்றடைந்துள்ளனர்.இது தொடர்ந்தும் பரந்துபட்ட துயரத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி வருகின்றது.இந்த வாரம் நாங்கள் பல கண்ணீர்களை சந்தித்தோம்.

வடக்கில் எங்கு பார்த்தாலும் இராணுவம் காணப்படுகின்றது,அவர்கள் ஆயிரக்கணக்கான நிலங்களை கைப்பற்றியுள்ளனர், அவர்கள் கடைகளையும் ஆக்கிரமித்துள்ளனர்,பல வர்த்தகங்களை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையின் இரண்டாவது முக்கிய மீன்பிடிதுறைமுகமான மயிலிட்டி இராணுவத்தின் பிடியிலேயே காணப்படுகின்றது. இதனை விட மோசமானது அந்த கிராமத்தில் யுத்தத்திற்கு பின்னரும் எஞ்சியிருந்த 40 வீடுகள் புல்டோசர் மூலம் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன,

அந்த கிராமத்தின் மக்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுபடமுடியாமல் யாழ்ப்பாணத்தில் முகாம்களிற்குள் முடங்கியுள்ளனர்.அந்த முகாம் வெறுப்பால் நிறைந்துள்ளது,ஓவ்வொரு மலசலகூடத்தையும் 15ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்துகின்றன.

யாழ்ப்பாணத்தில் மாத்திரம், டேவிட்கமரூன் இரு வருடங்களிற்கு முன்னர் விஜயம்மேற்கொண்ட முகாமில் 1700 பேர் வாழ்கின்றனர்.அவர் அவ்வேளை முன்வைத்த கோரிக்கைகள் எவையும் நிறைவேறவில்லை,யுத்த குற்றவிசாரணைகளில் சர்வதேச பங்களிப்பு அவசியம் என்பது உட்பட.

இலங்கையின் கொலைக்களங்களில் நாங்கள் பார்த்த விடயங்கள் சொல்லமுடியாதவேதனையை அளிப்பவையாக காணப்படுகின்றன,இங்கேயே விடுதலைப்புலிகள் சிலரை பணயக்கைதிகளாக பயன்படுத்தினர்,அதனை விட பெருமளவானவர்கள் படையினரால் படுகொலைசெய்யப்பட்டிருந்தனர்,

பாதுகாப்பு வலயம் என தெரிவித்த பின்னர். அந்த பகுதியில் ஷெல் வீச்சினால் உருவான பாரிய குழிகளைஅகற்ற எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை,அவற்றிற்குள் பழுதடைந்த புடவைகள் ஆடைகளை காணமுடிகின்றது, இதனை விட மோசமாக கடற்கரையில் கைவிடப்பட்ட ஓற்றை காலணிகளை காணமுடிகின்றது,குறிப்பாக சிறிய பிள்ளைகளின் காலணிகளை.

இன்றிரவு சனல் 4 வடக்கில் எவ்வளவு தூரம் இயல்பு நிலை திரும்பியுள்ளது என்பதை தெரிவிக்கும்,விடுதலைபுலிகளின் தோல்வி காரணமாக இந்த விடயங்கள் குறித்து நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை,இவற்றிற்கு தீர்வை காணவி;ட்டால் மீண்டும் வன்முறைகள் வெடிக்கலாம் என வடமாகாண முதலமைச்சர் எச்சரிக்கின்றார்.

விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதை கொண்டாடும் யுத்தநினைவுத்தூபிகள்,பயங்கரவாதிகள் என அவர்கள் அழைப்பவர்களை தோற்கடித்ததில் இராணுவத்தின் வீரம் மற்றும் தேசப்பற்று ஆகியவற்றை தம்பட்டமடிக்கும் நினைவுச்சின்னங்கள் போன்று தென் பகுதியின் அதிகார திமிரை வெளிப்படுத்துபவை வேறு எவையும் இருக்கமுடியாது.வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை,அவற்றிற்குள் பழுதடைந்த புடவைகள் ஆடைகளை காணமுடிகின்றது, இதனை விட மோசமாக கடற்கரையில் கைவிடப்பட்ட ஓற்றை காலணிகளை காணமுடிகின்றது,குறிப்பாக சிறிய பிள்ளைகளின் காலணிகளை.

இன்றிரவு சனல் 4 வடக்கில் எவ்வளவு தூரம் இயல்பு நிலை திரும்பியுள்ளது என்பதை தெரிவிக்கும்,விடுதலைபுலிகளின் தோல்வி காரணமாக இந்த விடயங்கள் குறித்து நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை,இவற்றிற்கு தீர்வை காணவி;ட்டால் மீண்டும் வன்முறைகள் வெடிக்கலாம் என வடமாகாண முதலமைச்சர் எச்சரிக்கின்றார்.

விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதை கொண்டாடும் யுத்தநினைவுத்தூபிகள்,பயங்கரவாதிகள் என அவர்கள் அழைப்பவர்களை தோற்கடித்ததில் இராணுவத்தின் வீரம் மற்றும் தேசப்பற்று ஆகியவற்றை தம்பட்டமடிக்கும் நினைவுச்சின்னங்கள் போன்று தென் பகுதியின் அதிகார திமிரை வெளிப்படுத்துபவை வேறு எவையும் இருக்கமுடியாது.