பேரவை அறிக்கையை குழப்ப அவசரமாக கூடுகிறது தமிழரசுக்கட்சி!
தமிழ் மக்கள் பேரவை நாளை வெளியிடவுள்ள
அரசியல் தீர்வுத்திட்ட யோசனை தொடர்பிலான அறிக்கை வெளிவரவுள்ள நிலையில் அதனைக் குழப்பும் நோக்கில் தமிழரசுக்கட்சி மாகாணசபை உறுப்பினர்களை செயற்பாட்டில் இறக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் பணிப்பிற்கமைய அனைத்து அமைச்சர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களை மாகாணசபை அலுவலத்தில் இன்று கூடுமாறு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 5மணியளவில் கைதடியில் உள்ள மாகாணசபை அலுவலகத்தில் அவசர சந்திப்பு இருப்பதால் அனைவரையும் ஒன்றுகூடுமாறு அழைப்புவிடப்பட்டுள்ளதாக தமிழ்கிங்டத்தின் விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
