மைத்திரி வீட்டில் நத்தார் கொண்டாடிய வடமாகாணசபை உறுப்பினர் யார்?
இவ்வாண்டு நத்தார் கொண்டாட்டத்திற்காக
எதிர்கட்சி தலைவரும் த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனுக்கும் வடமாகாணசபை உறுப்பினர் ஆனல்ட் குடும்பத்தினருக்கும் மைத்திபால சிறிசேனவின் வீட்டில் நத்தார் விருந்து வழங்கப்பட்டிருப்பதாக தமிழ்கிங்டொத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த விருந்துபசாரத்திற்கு இன்னும் பல முக்கிய புள்ளிகள் சென்றிருந்ததாகவும் அவர்கள் புகைப்படங்களும் விரைவில் வாசகர்களுக்கு அறியத்தரப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்த விருந்துபசாரத்திற்கு சுமந்திரனின் செல்லப்பிள்ளைகளில் ஒருவரான வடமாகாணசபை உறுப்பினர் ஆனல்ட் அவர்களும் அவரது குடும்பத்தினரும் கலந்துகொண்டதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. முதலமைச்சருக்கும் சுமந்திரனுக்குமான பனிப்போர் ஆரம்பமான நாளிலிருந்து சில மாகாணசபை உறுப்பினர்கள் முதல்வருக்கு எதிரான சுமந்திரனால் களமிறக்கப்பட்டுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர்கள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டு இருந்து வந்திருந்தது அறிந்ததே.
வடமாகாணசபை தேர்தல் மற்றும் கடந்த பாராளுமன்ற தேர்தல்களின்போது பொங்குதமிழ் நாயகன் தானே எனப்பிரச்சார மேடைகளில் தேசியம் பேசிய வடமாகாணசபை உறுப்பினர் ஆனல்ட் இதயங்களால் இணைந்த அரசின் ஜனாதிபதியும் தமிழர்களில் வாழ்வில் என்றும் மறக்கமுடியாத முள்ளிவாய்க்கால் அவலங்களின்போதும் பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் படுகொலை செய்தபோதும் பிரதிப்பாதுகாப்பு அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேனவுடன் இரவு விருந்தில் கலந்துகொண்டு தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தியிருப்பதானது அவர்களின் கொள்கை விளக்கங்களை மக்களுக்கு வெளிச்சமிட்டு காட்டுவதாக உள்ளது.
இவ்வாரம் யாழ் வந்தடைந்த மைத்திரிபால சிறிசேன நத்தார் கொண்டாட்ட நிகழ்விற்கு முதலமைச்சரை மட்டும் அழைத்திருந்த நிலையில் நேற்றையதினம் அவர் முதலமைச்சரை மட்டும் அழைத்தது தவறு எனவும் தமது வடமாகாணசபையில் குறிப்பாக ஆனல்ட் கிறிஸ்த்தவ மதத்தை சார்ந்தவரென்றும் அவைத்தலைவர் சி.வி.கே ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த நிலையில் இந்த சந்திப்புக்கு த.தே.கூட்டமைப்பின் ராஜதந்திரிகளால் முதலமைச்சருக்கு சவாலான ஒரு குழுவிற்கு மகிழ்வினை கொடுப்பதற்காகவே விசேடமாக அழைத்து சென்றதாக சம்பந்தன் தரப்பிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.