சர்வதேச விசாரணை முடிவடைந்துவிட்டது சுமந்திரன் பாணியில் மாவை(காணொளி )
வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான
சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரை வரவேற்கும் நிகழ்வு வவுனியா தமிழரசுக் கட்சியின் தாயகம் அலுவலகத்தில் இன்று நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சர்வேதேச விசாரணை முடிவடைந்துவிட்டது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோர் தெரிவித்த கருத்தை மீண்டும் இந்த நிகழ்வில் வலியுறுத்திய மாவை சேனாதிராசா ஆனால் சிலர் சர்வதேச விசாரணை நடக்கவில்லை என்று புரியாமல் பேசுவதாகவும் நீதியரசராக இருந்த வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு இது புரியாமல் இருந்தால் அது ஆச்சரியமான விடயம் தான் என்றும் கூறியிருக்கிறார்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை மீது வட மாகாண முதலமைச்சர் தமிழ் மக்கள் ஆதரவாக இருக்க வேண்டும் என்று கூறுவதற்கு பதிலாக தேர்தல் அறிக்கைக்கு மாறான கருத்தையே தெரிவித்திருந்தார் என்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற வகையில் அவரின் கருத்து அமைந்திருந்தது என்றும் தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதுடன் அவரை கேலி செய்யும் வகையிலும் சில கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.

அவரை அணுகுவதற்கும்(கையாள்வதற்கும்) திட்டங்கள் இருப்பதாக கூறும் மாவை சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட போராட்ட இயக்கத்திற்கும் முதலமைச்சருக்கும் தொடர்பிருப்பதாக சுட்டிகாட்டியதோடு அண்மையில் தமிழரசு கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் கூடிப்பேசி ஐ.நாவிற்கு மகஜர் அனுப்பியதையும் குற்றமாக சுட்டிக்காட்டும் மாவையின் போக்கு சம்பந்தன் சுமந்திரன் பாணியில் ரணிலின் வலைக்குள் மாவையும் உள்வாங்கப்பட்டாரா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கலைந்து சென்றவர்கள் எமது செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச விசாரணை முடிந்துவிட்டதாக முன்னதாக கூறிய மாவை அதே உரையில் இறுதியில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.
இன்று சர்வதேச விசாரணை தேவை என மனித உரிமை பேரவைக்கு அனுப்ப கையெழுத்து வாங்குகின்றார்கள். சரி வாங்கட்டும் விழிப்புணர்ச்சி தேவையானது. நாங்கள் அதற்கு தடையாக இருக்கமாட்டோம். ஆனால் உண்மையை பேசுகின்ற அந்த தத்துவம் துடிப்பு எங்களுக்கு தெரியவேண்டும். எங்களுடன் கூட இருக்கின்ற 3 கட்சிகளில் சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் அமெரிக்காவில் பேசுகின்றபோது எங்களுடன் வந்திருந்தார்கள்.
பிரேரணை நிறைவேற்றும் போது எங்களுடன் இருந்தார்கள். தற்போது அவர்கள் மூன்று பேரும் ஒரு இடத்தில் கூடி போர்க்குற்ற விசாரணையே தேவை என கூறுகின்றார்கள். அது எப்போதோ நிறைவேற்றப்பட்டாகிவிட்டது.
ஒரு நாட்டைப்பற்றி ஒரு விசாரணை கொண்டு வரப்படுகின்ற போது உள்ளக விசாரணை இடம்பெறவேண்டும். அந்த நாட்டின் இணக்கத்துடன் கொண்டு வரப்படவேண்டும். அதுவே அதனுடைய சாராம்சம்.
எங்களுடைய தேர்தல் அறிக்கையில் சர்வதேச விசாரணை பற்றி தெரிவிக்கப்பட்டு நாங்கள் அதனை வலுவூட்டி சிறந்த போர்க்குற்ற விசாரணை இடம்பெறவேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.