சட்டத்தரணி சயந்தன் -சாணக்கியன் சுமந்திரனாக பெயரை மாற்றினார்!
மாகாணசபை உறுப்பினர்களை தத்தமது பிரச்சாரப்பணிகளுக்கு சேர்ப்பதில் கடும் போட்டி நிலவி வருகின்றது தற்போதுவரை சுமந்திரன் இருவரை தனது பக்கம் அழைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொழும்பிலிருந்து கிடைக்கும் பணம் சொகுசு வாகன சுகபோகம் என்பது த.தே.கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களின் பெயரையே மாற்றுமளவிற்கு சென்றுள்ளது கவலையளிக்கிறது.
இது தொடர்பில் கிடைக்கும் தகவலின்படி வடமாகாணசபை உறுப்பினரான சட்டத்தரணி கேசவன் சயந்தன் தனது முகநூலை இன்றிலிருந்து ”சாணக்கியன் சுமந்திரன்” என மாற்றும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இவர்கள் இன்று தமது பெயரையே மாற்றுபவர்கள் நாளை உரிமையா சலுகையா என வரும்போது எதை எதை மாற்றப்போகின்றார்களோ என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த தேர்தலில் வடமராட்சியில் தேர்தலில் இறங்குவதற்காக முன்னாள் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அந்த பகுதி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை அழைத்தபோதும் அவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காத நிலையில் அப்பாத்துரையின் காவில் விழும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
அந்த வகையிலேயே அவரை சமாதானப்படுத்தி அவரை நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடாமல் நிறுத்துவதற்காக ரணிலிடம் பெற்றுக்கொண்ட வாகனத்தினை வழங்கியதன் மூலம் அவரை சமாதானப்படுத்தியதோடு அவரது மாணவரான தென்மராட்சியை பிரதிநிதுத்துவப்படுத்தும் மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தனை தனது பக்கம் சாய்ப்பதனூடாக தென்மராட்சியில் செல்வாக்கு செலுத்தும் அருந்தவபாலனை தேர்தலில் தோற்கடிப்பதற்கு திட்டம் தீட்டியிருந்தார்.
இதனடிப்படையில் செயற்பட்ட சுமந்திரன் தேர்தலில் பின்னர் தான் கொழும்பிலுள்ள இதயபூர்வமான தொடர்புகளை பயன்படுத்தி மேலும் வாகனங்களை பெற்றுக்கொடுப்பதற்கு சம்மதித்திருக்கிறார். அந்த வாகனத்தை பெறுவதற்கு மாகாணசபை உறப்பினர்களிடையே கடும்போட்டி நிலவியிருந்ததாகவும் சிலர் சுமந்திரனை தாம் ஆதரித்தால் தாமும் அடுத்த தேர்தலில் ஓரங்கட்டப்படலாம் என விலகி நிற்பதாகவும் வடமாகாணசபை வட்டாரங்களிலிருந்து அறியக்கிடைக்கிறது.
தொடர்புடைய முன்னைய செய்திகளை பார்வையிட