Breaking News

இலங்கைக்கு எதிராக எந்த தீர்மானமும் வேண்டாம்-சுமந்திரன்(காணொளி)

ஐ.நா வில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட
விசாரணை அறிக்கை இலங்கைக்கு எதிரானதாக இருக்க கூடாதென்பதில் மிகத்தீவிரமாக செயற்பட்ட சுமந்திரன் அதனை சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு ஒப்புக்கொண்ட விடயத்தை வாசகர்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.

அதில் சுமந்திரன் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்தேசிய கூட்டமைப்பானது ஜெனிவாவுக்கு செல்வதில்லை என முடிவெடுத்துள்ளது. நாங்கள் இந்நாட்டின் ஒரு பகுதி. நாங்கள் இந்நாட்டின் அரசியற்கட்சி. ஜெனிவாவில் என்ன நடக்கிறது என்றால் அது நாடுகளுக்கிடையிலான விடயம். அங்கு 47 நாடுகள் வாக்களிக்க கூடிய நிலையில் உள்ளன. அது அவர்களுடைய விடயம் (எப்படி வாக்களிப்பது என்பது). 

”நாங்கள் ஏனைய நாடுகளை ஆதரிக்குமாறு பரப்புரைகளை செய்யமுடியும். ஆனால் நாங்கள் அப்படி செய்வதை விரும்பவில்லை. ஏனென்றால் நாங்கள் இந்நாட்டின் ஒரு பகுதி. நாங்கள் இந்த நாட்டுக்கு எதிராக ஒரு விடயத்தைக்கூட கொண்டு வரப்படுவதை விரும்பவில்லை”. (We can canvas to certain positions but we don’t want anything against Sri Lanka)




நாங்கள் சிறிலங்கா என்ற எங்கள் நாட்டை முன்னோக்கி செல்லுமாறு கேட்டுக்கொள்ளவே விரும்புகின்றோம். அப்படி சென்று இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை கொண்டுவரமுடியும். அமெரிக்காவால் கொண்டுவரப்படுகின்ற இத்தீர்மானமானது உள்ளக பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துமாறு சிறிலங்காவை ஊக்கப்படுத்துகின்றது. அத்தகைய உள்ளக விசாரணைப் பொறிமுறையை நாங்கள் ஆதரிக்கின்றோம்.

என தெரிவித்துள்ளார்.

இது 2012 ஆம் ஆண்டு இவர்கள் ஜெனீவாவிற்கு செல்லாதது ராஜதந்திரமென மக்களை ஏமாற்றிய சுமந்திரன் பின்னர் இரண்டாவது தீர்மானம் அமெரிக்காவால் கொண்டுவரப்போவது உறுதியானபோது அதனை வலுவிழக்க செய்வதற்கு நாடுகளிடம் ஓடிச்சென்று இலங்கைக்கு எதிரான சரத்துக்களை குறைக்குமாறும் கேட்டுக்கொண்டார் என்பதையும் நினைவூட்டுகின்றோம்.

சிங்கள மக்களிடம் நாம் சிறிலங்கன்கள் சிறிலங்காவுக்கு எதிராக எதனையும் செய்யமாட்டோம் எனக்கூறும் அதே சுமந்திரன் தமிழ் மக்கள் கேள்வி கேட்கும் போது வெளிநாடுகள் பல கேட்டுக்கொண்டதற்கு இணங்க ராஜதந்திர காரணத்திற்காக ஜெனீவாவிற்கு செல்லவில்லை எனக்கூறுவது மக்களை எப்படி ஏமாற்றுகின்றார் என்பதற்கு நல்ல சான்றாகும்.

இது தொடர்பில் அப்போது பி.பி.சி தமிழோசையிடம் அவர் கூறிய கருத்தும் வாசகர்களுக்கு உதவும் என்பதால் இதனையும் இணைக்கின்றோம்.


பின்னிணைப்பு-

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரனும் சிறீதரனும் மார்ச் 2014இல் ஜெனீவாவில் சிறீலங்கன் தூதுவராலயத்திற்கு மரியாதை நிமித்தம் விஜயம் செய்தனர்

என்ன செய்தார்கள் அங்கே? "In an unexpected development, both Sumanthiran and Shritharan paid a ‘courtesy call’ on Sri Lanka’s Permanent Representative, Ravinatha Aryasinha. The meeting took place at the Sri Lanka mission in Geneva."


தொடர்புடைய முன்னைய செய்திகளை பார்வையிட