Breaking News

அம்பலமானது சுமந்திரனின் இரகசிய சந்திப்பு!!(காணொளி)

இலண்டனில் சுமந்திரன் கலந்துகொண்ட இரகசிய
சந்திப்பு தொடர்பில் நேற்றைய தினம் செய்தி வெளியிட்டிருந்தோம் இதனை தொடந்து இதில் கலந்துகொண்ட தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகள் எனச் சொல்லிக்கொள்ளும் மூவரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இலங்கை வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பிரதிநிதி , நோர்வேயின் முன்னாள் அமைச்சரும் இலங்கைக்கான நோர்வேயின் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம், சுவிஸர்லாந்தின் வெளிநாட்டமைச்சை சேர்ந்த மார்டின் டெசிஞ்சர் , தென் ஆபிரிக்காவின் In Transformation Initiative (ITI) என்ற அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகள், உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் மற்றும் நோர்வே ஈழத் தமிழர் அவை மற்றும் உலகத் தழிழர் பேரவையின் சிரேஷ்ட உறுப்பினர் டாக்டர் ரமணன் ஆகியோர் உட்பட வேறு சிலரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

இரகசியமாக தயார்படுத்தப்பட்ட லண்டன் சந்திப்பு பற்றிய செய்தி வெளியுலகிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அதனால் அதுபற்றிய விளக்கத்தை வழங்கவேண்டிய தேவை உள்ளது. இந்த சந்திப்பு பற்றி தமிழ்த்தொலைகாட்சி ஒன்றில் கலந்துகொண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உலகத்தமிழர் பேரவை பேச்சாளர் சுரேந்திரன் நோர்வே ஈழத்தமிழர் அவையைச் சேர்ந்த ரமணன் ஆகியோர் தமது கருத்துக்களை தெரிவித்தனர்.

சந்திப்புபற்றி முப்பெரும் தலைவர்கள்

தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கிடைப்பட்ட காலத்தில் செய்யப்படவேண்டிய உடனடி தேவைகள் என்பது பற்றி கலந்துரையாடவே இலண்டன் சந்திப்புக்கு இரகசியமாக வந்தோம். நடைபெற்ற சந்திப்பில் தமிழ்மக்களுக்கான நிதியுதவிகளை பெற்றுக்கொள்ளும் பொறிமுறை பற்றியே பேசியதாக சுமந்திரன் தெரிவித்தார். இலங்கைத்தீவில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய தமிழ்மக்களின் உணர்வுகளை புரிந்து புலம்பெயர்தமிழர்கள் செயற்படவேண்டும் என தான் விரும்புவதாகவும் சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் போர்க்குற்றம் பற்றியோ எமது அரசியல் தீர்வு பற்றியோ உள்ளக விசாரணை பற்றியோ விவாதிக்கப்படவில்லை எனவும் உலகத்தமிழர் பேரவையானது தமிழர்களுக்கான தீர்வு என்பது பேசித்தான் தீர்க்கப்படவேண்டும் என்பதே தனது கொள்கையாக கொண்டுள்ளது எனவும் தெரிவித்தார். எனவே அதுபற்றி பயப்படவேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம் எனவும் சுரேந்திரன் தெரிவித்தார்.

சிங்கப்பூர் பேச்சுவார்த்தையிலும் நாங்கள் மூன்று பேரும் பங்குகொண்டோம். அதுகூட இரண்டாவது சந்திப்பென்றும் அங்கு எதிர்காலத்தில் இலங்கைக்கு எத்தகைய அரசியல் யாப்பை கொண்டுவரலாம் என்பது பற்றி கலந்துரையாடியிருந்தோம். இனிமேல் நடைபெறும் சந்திப்புகளில் காலத்தை இழுத்தடிக்காமல் ஒரு காலவரையறையுடன் பேசவேண்டும் என கேட்கவிருக்கின்றோம் என மருத்துவர் ரமணன் தெரிவித்தார்.

என்ன பேசுகின்றார்கள் என்பதைவிட  யார் பேசுகின்றார்கள் என்பதே முக்கியமானது?

இவர்கள் பேச்சுவார்த்தைகளில் யாப்பை திருத்துவதற்காகவோ அல்லது அத்தியாவசிய தேவைகளை தீர்ப்பதற்கோ அல்லது அரசியல் தீர்வு தொடர்பில் பேசுவதாக இருந்தாலோ அவற்றை தமிழ்மக்கள் சார்பில் யார் பேசமுடியும் கட்டாயமாக உலகநாடுகள்தான் இந்த அழைப்பை ஏற்படுத்தியிருந்தால்கூட நாட்டிலுள்ள தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் யார் கலந்துகொள்வது?

மக்கள் பிரச்சனைகள் என்றுவருகின்றபோது அந்த மக்களின் பிரதிநிதிகளோடுதானே பேச முடியும் உடனடித் தேவைகள் பற்றி ஆராய்வதென்றால் வடமாகாணத்திற்கென மக்களால் ஏகோபித்து தெரிவுசெய்யப்பட்ட வடமாகாண முதலமைச்சர் கலந்துகொள்ளக்கூடாதா? அவர் கலந்துகொண்டால் இன அழிப்பு,மக்களின் அன்றாடப்பிரச்சனை, இராணுவ ஆக்கிரமிப்பு என இன்றைய அரசின் முகத்திரை மீண்டும் உலகநாடுகளிடம் கிழிக்கப்பட்டுவிடும் என இம்மூவரும் கருதுகிறார்களா?

முதலில் இலங்கை வெளிநாட்டமைச்சரும் வருகிறார் அவருடன் பேசப்போகின்றோம் என கூறும் இவர்கள் முதலில் மகிந்தவால் தடைசெய்யப்பட்ட 16 தமிழ் அமைப்பின் மீதான தடையையாவது (உலகத்தமிழர் பேரவை உட்பட) மைத்திரி அரசால் நீக்கமுடிந்ததா? உங்கள்மீது தடைஇருக்கும்போது எப்படி தடைசெய்யப்பட்ட அமைப்புடன் அரசு பேசுவது சட்டப்படியாகும்? பேசுவதற்குமுன் அந்த தடையையாவது உங்களால் நீக்கமுடிந்ததா? இந்த தடைவிவகாரம் சட்டம் படித்த சுமந்திரனுக்கு தெரியாதா?

ராஜதந்திரிகள் அரசியல் பிரமுகர்கள் சந்திக்கும்போது இரகசியமாகவே சந்திப்புக்களை செய்வது ஒருவகைளில் ஏற்றுக்கொள்ளக்கூடியபோதும் அதனை செய்யும்போது தமிழ் மக்கள் சார்பில் யார் கலந்துகொள்வது ஒட்டுமொத்த தமிழ்மக்களின் அடிப்படையோ அரசியலோ பேசும்போது பின்கதவால் கொண்டுவரப்பட்ட சுமந்திரனோடு பேசினால் சரியா? அவருக்கு தமிழ் மக்களின் அடிப்படி பிரச்சனை தெரியுமா? அவரே கடந்த 30 ஆண்டுகளுக்கு பின்னர்தான் வடமராட்சிக்கே வந்திருக்கிறார். எதிர்வரும் தேர்தலில் பருத்தித்துறை தொகுதியில் போட்டியிடும் நோக்குடன் கடந்தவாரம் குடத்தனையிலுன்ன தாயாரது இல்லத்தில் பால்காச்சி குடியேறியுள்ளார் இவர்கள்தான் இனி மக்களோடு மக்களாக இருந்து மக்களின் பிரச்சனையை அறிந்து எப்போது பேசுவது?

அடுத்த இருவரும் உலகத்தமிழர் பேரவையை சேர்ந்தவர்கள் தமிழ் மக்களை பிரதிநிதுத்துவப்படுத்தும் புலம்பெயர் தேசத்தில் இயங்கும் பல தமிழ் அமைப்புக்கள் செயற்பட்டுவருகின்றபோதும் உலகத்தமிழர் பேரவையும் தனிப்பட்ட சுமந்திரனாலும் எட்டப்படுகின்ற தீர்மானங்கள் தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்ப்பதாக அமையுமா?

சரி யாப்பை திருத்துவதென்றாலோ அல்லது அத்தியாவசிய தேவைகள் பற்றி பேசுவதென்றாலோ தெற்கு மக்களுக்கு தெரியாமல் நீங்கள் இரகசியமாக பேசுவதன்மூலம் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தென்பகுதி மக்கள் இடம்கொடுப்பார்களா? இவற்றை கருத்திற்கொண்டாவது இனிவரும் காலங்களில்

தென் ஆபிரிக்காவின் In Transformation Initiative அமைப்பின் அனுசரணையுடன் நடைபெறும் இந்த கூட்டம், கடந்த காலங்களில் சிங்கப்பூர் மற்றும் சில நாடுகளில் நடைபெற்ற கூட்டங்களின் தொடர்ச்சியாகவே நடைபெற்றுவருகிறது. இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும் நோக்கத்தை இலக்காக கொண்டே இந்த சந்திப்புக்கள் நடைபெற்று வருவதாக கடந்த காலங்களில் விளக்கம் கூறப்பட்டிருந்தது.

இந்த சந்திப்புக்கள் ஒரு ஏமாற்று வேலை என்றும் தமிழ் மக்களின் நியாமமான கோரிக்கைகளை பலவீனப் படுத்துவதற்கும் இனப்படுகொலையாளிகளை பாதுகாக்கும் ஒரு முயற்சியே இது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த சந்திப்புக்களில் ஈடுபட்டுவரும் உலகத் தமிழர் பேரவையானது ஒரு பலவீனமான அமைப்பு என்றும் புலம்பெயர் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தாத அமைப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவளை, உலகத் தமிழர் பேரவையின் செயற்பாடுகள் குறித்து தனது கடும் அதிருப்தியை கடந்த வருடம் பகிரங்கமாக வெளியிட்டிருந்த பிரித்தானிய தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவையின் தீர்மானங்கள் செயற்பாடுகளில் தாம் எந்த வகிபாகத்தையும் கொண்டிருக்கவில்லை என்றும் அவற்றிலிருந்து விலகி இருப்பதாகவும் தெரிவித்திருந்தது இங்கு சுட்டிக்காட்த்தக்கது.

இதேவேளை த.தே.கூட்டமைப்பின் தற்போதைய நிலை மற்றும் உலகத்தமிழர் பெரவையின் இரகசியமான செயற்திட்டங்கள் தொடர்பில் அண்மையில் நா.க.அரசின் பிரதமர் உருத்திரகுமார் அவர்கள் இவ் இரு தரப்பினரும் கொள்ளை நிலையில் உறுதிகலையாத நிலையிலிருக்குமாறு உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.


இந்த நேரத்தில் நா.க.அரசின் பிரதமரின் உரை நோக்கத்தக்கது


தொடர்புடைய முன்னைய செய்தி

லண்டனிலும் சுமந்திரனின் இரகசிய சந்திப்பு !

சிங்கப்பூரில் இடம்பெற்ற இரகசியப் பேச்சுவார்த்தை!