சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட கார் துரைக்கு கைமாற்றம்?
சந்தித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் வடமாகாணசபையை புறக்கணித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டு பெருமளவான நிதி வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.
அந்தநிலையில் அவரது குற்றச்சாட்டை சுரேஸ் பிரேமச்சந்திரனும் மாவை சேனாதிராசாவும் தாம் பெற்றுக்கொண்ட உதவிகள் தொடர்பில் விளக்கம் கொடுத்திருந்த நிலையில் நேற்றைய தினம் சிறிதரன் அவர்கள் தான் எந்தவித உதவியையும் பெற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அடுத்த சர்ச்சைக்குரிய நபரான எம் ஏ.சுமந்திரன் பெற்றுக்கொண்ட அதி கொகுசு கார் தற்போது அப்பாத்துரை விநாயகமூர்த்திக்கு கைமாற்றப்பட்டுள்ளதாக மாகாணசபை வட்டாரத்திலிருந்து அறியக்கிடைக்கிறது.
விக்கினேஸ்வரனின் குற்றச்சாட்டையடுத்தும் இலண்டனில் இரகசிய சந்திப்பின் பின்னரும் மக்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பை தணிப்பதற்காகவும் வாகனத்தை அப்பாத்துரை விநாயகமூர்த்திக்கு வாகனத்தை வழங்குவதன்மூலம் அவரை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஓரங்கட்டுவதும் மாகாணசபை உறுப்பினர் சயந்தனின் ஆதரவை பெற்றுக்கொள்வதுமே தீட்டப்பட்ட திட்டமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்.