Breaking News

வித்தியாதரனின் புதிய அரசியல் கட்சி எதற்காக ? (காணொளி இணைப்பு)

உதயன் சுடரொளி பத்திரிகை முன்னைநாள் ஆசிரியரும் மலரும் இணைய நிர்வாகியுமான வித்தியாதரன் அவர்கள் தற்போது முன்னைநாள் போராளிகளை இலக்குவைத்து புதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ளார்.



ஏற்கனவே முதலமைச்சர் தெரிவு தனக்கு கிடைக்கும் என நினைத்து அதுகிட்டாமல் போனதால் த.தே.கூட்டமைப்பு தலமைகள் மீதுள்ள வெறுப்பில் இருந்து மலரும் இணையத்தை ஆரம்பித்த வித்தியாதரன் தற்போது இந்திய தூதரகத்தின் ஆலோசனைக்கு அமைவாக எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை இலக்குவைத்து முன்னாள் போராளிகளை திரட்டும் பணியில் முழுவீச்சில் இறங்கியுள்ளார்.

அவர் வழங்கியுள்ள பேட்டியில் ஐயாயிரம் வழக்குபோட்டு ஐந்து வருடங்களாக அலைந்துதிரியாமல் ஐந்து போராளிகளை திலீபனைப்போல உண்ணாவிரதமிருக்கவிட்டு டில்லிக்கும் கொழும்புக்கும் சம்பந்தர் ஐயா போய்வந்தால் பிரச்சனை தீர்ந்துவிடும்.என்றும் விடுதலைப்போராளிகளை இணைத்து இவ்வாறு கட்சி அமைப்பது தற்போதைய சிறிலங்கா கட்டமைப்புக்குள் சாத்தியமா எனக்கேட்டதற்கு வித்தியாதரன் இப்படி சொல்கிறார்.

போராடிய விடுதலைப்போராளிகளை அப்படியே விடுவது சிறிலங்கா அரசுக்குத்தான் ஆபத்து என்று தான் ஏற்கனவே சிறிலங்கா புலனாய்வாளர்களுக்கு விளக்கியுள்ளேன். எனவே அவர்களது சிந்தனையை மாற்றி ஜனநாயக வழிமுறையான போராட்டத்திற்குள் கொண்டுவந்து சேர்க்காவிட்டால் உங்களுக்குத்தான் ஆபத்து. என்றும் சொல்கிறார்.

தமிழ்த் தேசியத்தையும் ஈழப் போராட்டத்தையும் வளர்த்தவன் நானே என்று மார்தட்டி சொல்லும் வித்தியாதரன் ஆரம்பிக்கும் கட்சியின் செயற்பாடு எவ்வாறு இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



தொடர்புடைய செய்தி

ஊடகவியலாளர் வித்தியாதரன் மகிந்தவுக்கு ஆதரவு?